ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களை உடன் தடை செய்யுமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதிலும் ஒருவித அச்ச நிலை பொதுமக்களிடையை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே, பாதுகாப்புநலன் கருதி இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் வகுப்புத் தடை மறு அறிவித்தல் வரை தொடருமென ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.மாகாணத்தில் மேலதிக வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரம் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.