தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மிடில்டன் தோட்ட மக்களுக்கு வீடுகளை புனரமைக்க உதயா உதவி!

தலவாக்கலை மிடில்டன் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்திருத்தம் செய்துகொள்ளவென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கட்டுமான பொருட்களை வழங்கி உதவி புரிந்துள்ளார்.

தீ விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புக்களை இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச முக்கியஸ்தர்கள் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆருதல் கூறினர்.

மேலும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
தொழிலாளர்களின் லயன் குடியிருப்பில் ஏற்படும் தீ விபத்துக்களின் போது அவர்களுக்கு காப்புறுதி நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் வகையில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles