போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை-26 வயது இளைஞன் கைது

நாட்டில் தற்போது போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதனால் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய, குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குருநாகல் பொலிஸ் அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அங்கு 232 போலி லொட்டரி சீட்டுகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles