பட்டப்பகலில் சக கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மரண தண்டனை கைதி

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதி ஒருவர் பட்டப்பகலில் மற்றுமொரு கைதியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலை குற்றச்சாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 52 வயதுடைய கைதி,
ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 29 வயதுடைய கைதியை கழிவறைக்குள் தள்ளி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் பொரளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த துஷ்பிரயோக சம்பவத்தை, 45 வயதான கைதி ஒருவர் நேரில் பார்த்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார் என இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து கைதிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொரளை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜானக பியதர்ஷன விதானகேவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles