இரத்தினக்கல் தொழில்துறையில் இடைத்தரகர்களாக தொழில் புரிபவர்களும், இரத்தினக்கல் வியாபார அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் என்ற தீர்மானத்துக்கு,இரத்தினக்கல் தரகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இரத்தினக்கல் உரிமையாளரிடமுள்ள கல்லை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் நவடிக்கையையே தரகர்கள் செய்கின்றனர். இந்நிலையில்,இவர்களும் வியாபார அனுமதிப்பத்திரத்தை பெறவேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது வரைக்கும், இரத்தினக்கல் உரிமையாளர் மற்றும் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோரேஅனுமதிப்பத்திரம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், தரகர்களையும் அனுமதி பெறுமாறு வற்புறுத்துவது ஏற்புடையதல்ல என,இவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.










