நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையும், போராட்டங்களும் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் புசல்லாவ பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக இன்று மதியம் ஒரு மணியளவில் அரச மற்றும் தனியார் வங்கி உத்தியோகத்தர்கள் இணைந்து வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாதைகள் ஏந்தியவாறு,உடனடியாக வரியை நிறுத்து, மக்கள் வயிற்றில் அடிக்காதே என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பட்டன.

இதில் அனைத்து வங்கிகளை சேர்ந்த சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இரண்டு மணிநேரம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
