நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில், இலங்கையிலிருந்து தப்பியோடிய நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான், ஓமான் எல்லையில் பதுங்கியிருப்பதாக வெளியாகிள்ளன.
முக்கிய சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மன்னாரில் இருந்து கப்பல்மூலம் தமிழகம் சென்ற கஞ்சிபான இம்ரான், இந்தியாவில் இருந்து போலி கடவுச்சீட்டுமூலம் நேபாளம் சென்றுள்ளார். அங்கு சிறிதுகாலம் தங்கியிருந்த பின்னர், ஓமானுக்கு சென்றுள்ளார்.
கஞ்சிபானி இமரான் உட்பட மேலும் சில பாதாள குழு உறுப்பினர்கள் ஓமான் எல்லையில் பதுங்கியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டவரே கஞ்சிபானி இம்ரான்.
