வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபன அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 339 உள்ளூராட்சிமன்றங்களுக்கான இந்த வருடத்துக்கான தேர்தல் மார்ச் மாதம் 09ஆம் திகதி நடைபெறவுள்ளது, எனினும் இவ்வருடம் எல்பிட்டிய பிரதேச சபை மற்றும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் நடைபெறாது.

அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பட்டியல்கள் அனைத்தும் தற்போது கிடைத்துள்ளதாகவும் அரசாங்க அச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Latest Articles