யாழ்ப்பாணம் கலாசார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையம் யாழ் நகரின் மிக உயரமான கட்டிடமாக இருக்கும்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ் கலாசார நிலையம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
யாழ் கலாசார மையமானது முழு வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடம், அருங்காட்சியக இடங்கள், ஒற்றை மாடி கற்றல் கோபுரம் மற்றும் ஒரு அரங்கம், பல ஊடக நூலகம், விரிவுரை அறைகள், ஸ்டூடியோக்கள் மற்றும் கேலரி இடங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளது.










