வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது!

வெளிநாட்டு பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் விபச்சாரத்திற்கு அனுமதி உண்டு எனக் கூறி வெளிநாட்டு பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவரை சிறுவர் மற்றும் மகளிர் பணியக குழுவினர் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்த பெண்களை வரவழைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி லட்சக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் பணியகம் குறிப்பிடுகிறது

அதன்படி சந்தேக நபர்கள் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வெள்ளவத்தையில் உள்ள வீட்டில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பெண்கள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அவர்களால் அழைக்கப்பட்ட கென்ய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 300 அமெரிக்க டாலர்கள் என்ற அடிப்படையில் தான் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு மணி நேரத்திற்கு 120 டாலர்கள் வரை தான் விற்கப்பட்டதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளதாக கூறியதால், வாக்குறுதி அளித்த தொகை கூட வழங்கப்படவில்லை எனவும், அதனை நம்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles