கந்தகெடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகிரியவத்த – மாளிகாவத்தைப் பகுதியில் கந்தகெடிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 90 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கந்தகெடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ராமு தனராஜ்
