பொரளையில் இளம் பெண் பலி – இரு இராணுவ வீரர்கள் கைது!

பொரளை, வனாத்தமுல்லை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, 25 வயதுடைய பெண்ணொருவர் பலியானார்.

இராணுவத்தினர் வசமிருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கி வெடித்தாலேயே அப்பெண் உயிரிழந்தார் என பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles