தேர்தல் கோரி தொடர் போராட்டம் – சஜித் அணி அதிரடி வியூகம்!

மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பதற்காகவும், தேர்தலை பிற்போடுவதற்கு அரசு மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற அவசர கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை பிற்போடுவதற்கு ஆளுங்கட்சி முயற்சிக்கின்றது என பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும், தேர்தல் குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையிலேயே அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி ஆராய சஜித் இந்த அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்துவதே சிறந்தவழியென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய தேர்தலைகோரி போராட்டம் நடத்தும் அழைப்பு ஓரிரு நாட்களுக்குள் விடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles