இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அத்துடன், மாற்று வழிகள் எதுவும் இன்மையாலேயே மின் கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டது எனவும், மின் கட்டண அதிகரிப்பால் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு சாதகமாக முடியுமென நம்புவதாகவும் அவர் கூறினார்.










