நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சமஷ்டியை வலியுறுத்துபவர்கள், லண்டனுக்கு சென்று அதனை கோரலாம் என சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
” எங்களை லண்டனுக்கு போகச் சொன்னால், அவரை நாங்கள் போத்துக் கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும். பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல தமிழ் பெயரும் அல்ல, எனவே, அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்” – எனவும் சிவி விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்
