இந்திய விசா அலுவலகத்தில் கொள்ளை – ஐவர் கைது!

இந்திய விசா விநியோக அலுவலகத்தில் மடிக்கணினி மற்றும் DVR இயந்திரம் என்பவற்றை திருடியமை தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருலப்பனை மற்றும் வௌ்ளவத்தை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

கிருலப்பனை பகுதியிலுள்ள ஓடையொன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 63 வயதான பெண்ணொருவரும் அடங்குகின்றார்.

தும்முல்ல பகுதியிலுள்ள இந்திய விசா அலுவலக்திற்குள் கடந்த 14ஆம் திகதி இரவு புகுந்து அங்கிருந்து மடிக்கணினி மற்றும் DVR இயந்திரம் என்பவற்றை திருடிய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles