“மாகாணசபைத் தேர்தல், நீதித்துறையின் சுயாதீனம் உட்பட தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினைகளின்போது எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான பொது மேடையே கூட்டு எதிரணியாகும்.” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கண்டிக்கு பயணம் மேற்கொண்ட கூட்டு எதிரணி உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, நாட்டு நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கூட்டு எதிரணி எனக் கூறப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன இதில் இணையாமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜி.எல்.பீரிஸ்,
“ கட்சிகளுக்கென தனித்துவமான அடையாளம் உள்ளது. முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. இது கட்சியோ அல்லது கூட்டணியோ கிடையாது. பொது மேடையாகும். தேசிய பிரச்சினைகள் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம்.
மாகாணசபைத் தேர்தல், நீதித்துறை சுயாதீனம் உள்ளிட்ட விடயங்களில் ஒன்றிணைந்து செயல்படலாம்.” – என்றார்.










