இலங்கையில் மேலும் 51 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (12) மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 36 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 15 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 397 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.