உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குள் பேராதனைப் பல்கலைக்கழகமும் தெரிவு

சர்வதேச தரவரிசையில், உலகின் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களுக்குள் பேராதனைப் பல்கலைக்கழகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக ஞாபகார்த்த மற்றும் நினைவுப் பொருட்கள் விற்பனை நிலையத்தை நேற்று முன்தினம் (23) திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய உபவேந்தர்,

பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட நினைவுப் பரிசுகள், பொருட்கள், பல்கலைக்கழகச் சின்னங்களுடன் கூடிய அடையாள அட்டைகள் போன்றவை இந்த இடத்தில் விற்கப்படுகின்றன.

புதிய விற்பனை நிலையத்தை திறந்து வைத்து பேசிய உபவேந்தர் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

US News & World Report வழங்கும் இந்த தரவரிசையில் சர்வதேச ரீதியில் முதல் 1000 உலகளாவிய பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் 901ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

சர்வதேச தரவரிசையில் ஆராய்ச்சிகள் , வெளியீடுகள், மாநாடுகள், சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட 13 துறைகள் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டு இந்த உலகின் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களில் இலங்கையில் உள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம் பேராதனைப் பல்கலைக்கழகமாகும். இலங்கையில் இவ்வாறானதொரு பதவியைப் பெற்ற முதலாவது பல்கலைக்கழகம் பேராதனையே எனவும் உபவேந்தர் தெரிவித்தார்.

சுமார் இரண்டாயிரம் பல்கலைக்கழகங்கள் மற்றும் முப்பதாயிரம் உயர்கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

பதின்மூன்று சிறந்த துறைகள் மூலம் உலகப் பல்கலைக்கழகங்கள் அவற்றின் செயற்பாட்டின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இளங்கலை மாணவர்கள் உட்பட இதற்கு பங்களித்த அனைத்து ஆசிரியர் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எம்.ஏ.அமீனுல்லா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles