12 வயது சிறுமிமீது பாலியல் வன்கொடுமை – 48 வயது கசிப்பு வியாபாரி பதுளையில் கைது!

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஸ்த்த நடுப்பிரிவு தோட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் 48 வயதான கசிப்பு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையால் பதுளை பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையிலும் ஈடுபட்டுவருகின்றார் என தகவல் கிடைத்துள்ளது.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles