சென்மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்களால், 104 ஆம் வருடத்தை முன்னி்ட்டு , நடாத்தப்படும் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையாலான கிரிக்கெட் சுற்று போட்டி எதிர் வரும் மார்ச் மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நோர்வூட் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
ஹட்டன் வலய கல்வி பணிமனையின் பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். பெற்றோர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்
சிறப்பு அதிதிகளாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
குறித்த போட்டியை 1998 சாதாரண தரம், 2001 உயர்தரம் மாணவர்களில் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது.
இந்த போட்டியினை கண்டு களிக்க அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
என்று பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பா. சிவநேசன் தெரிவித்தார்.










