ரத்கம, ஓவகந்த பகுதியில் 20 வயதுடைய இளம் தாயொருவர் குத்திக்கொலை செய்ப்பட்டுள்ளார். அத்துடன், அவரின் 42 வயதான தாய்மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நிலையில் அவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
கத்திக் குத்து தாக்குதலில் ரத்கம, ஓவகந்தவை வசிப்பிடமாகக் கொண்ட லக்ஷானி (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார். அவருக்கு இரண்டு வயதில் குழந்தையொன்றும் உள்ளது.
ரத்கம பிரதேச சபையில் சிற்றுழியராக பணியாற்றும் 55 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும், அவர் உயிரிழந்த பெண்ணின் உறவினர் (தாத்தா) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் 17 வயதுடைய மகன் கொலையுண்ட பெண்ணின் கணவனின் சகோதரியுடன் காதல் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளது.










