அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக நாளை (01) பாரிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், புகையிரத தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட 29 தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நாளை மதியம் 12.00 மணிக்கு மருதானை புகையிரத தலைமையகத்திற்கு முன்பாக, புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். பி விதானகே தெரிவித்தார்.
இன்று தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் சாதகமான தீர்வை வழங்காவிடின் ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.










