சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமி

பின்கெல்ல பிரதேசத்தில்வீடொன்றில் 06 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயும், தாயின் கள்ளக்காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலுடன் வசித்து வந்த குழந்தை பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் மருத்துவ உதவி வழங்கப்படவில்லை எனவும் இதற்கு முன்னர் பல தடவைகள் தாயின் கள்ளக்காதனால் உடல்ரீதியாக தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தையின் உடலில் பல தழும்புகள் மற்றும் வீக்கங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணம் தொடர்பாக குழந்தையின் 25 வயது தாயும், பெண்ணின் 29 வயது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles