பேருந்து சாரதிக்கும், நடத்துனருக்கும் கொவிட் தொற்று !

பேருந்து சாரதிக்கும், நடத்துனருக்கும் கொவிட் தொற்று !
தலைநகரில் பொதுப் போக்குவரத்துக்களைத் தவிர்க்குமாறு ஆலோசனை!

கொழும்பு – மத்துகம சொகுசு பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதி, அதன் நடத்துனர், பேருந்தின் உரிமையாளர் ஆகிய மூவரும் கொவிட் தொற்று உள்ளாகியுள்ளனர்.

பேருந்தின் உரிமையாளர் மதுகம நவுன்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நடத்துனர் மத்துகம பந்துகம பிரதேசத்தையும், சாரதி ஒவிடிகல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூவரும் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சுயவிருப்பில் பீ.சீ.ஆர்.ப ரிசோதனை செய்துகொணட நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளைஇ வேலைக்கு செல்வோர் பொதுப்போக்குவரத்தை தவிர்த்துக்கொள்ளுமாறு தேசிய மருந்தகக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்இ
“தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் கொத்தானது சமூகத்தில் பல்வேறு இடங்களில் விஸ்தரித்துள்ளது. இருப்பினும் சென்ற முறைப் போன்று நாடளாவிய ரீதியில் முடக்கப்படாமல் குறிப்பிட்ட சில இடங்களே முடக்கப்பட்டுள்ளன. மக்களின் அன்றாட பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமலிருப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இல்லாத பகுதியில் கொவிட் இல்லை என்று அர்த்தப்படுத்த முடியாது.

அதே போன்று தனியார் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்தும் நாம் அறிவித்துள்ளளோம் அவை பின்பற்றப்பட வேண்டும். அதே போன்று நிறுவனமொன்றில் வேலைக்கு வரும் நபர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தாது நிறுவனத்திற்கான தனிப்பட்ட போக்குவரத்து முறையொன்றை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக பாதுகாப்பாக செயற்படலாம்.
அதேபோன்று ஊழியர்களிடையே சமூக இடைவெளியை பேணுவதும் முக்கியமான ஒரு விடயமாகும்.

மேலும் சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்களில் ஒன்றாக இணைந்து உணவருந்துதல் தொற்றுப் பரவலுக்கு காரணமாக இருக்கலாம். எனவே உணவகங்களில் உணவுகளை வாங்கினாலும் தனியாக இருந்து உணவருந்துதல் தொற்றுப் பரவலைத் தவிர்க்கும். அதே போன்று பொருட்களை கொள்வனவு செய்கின்ற போது அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு நடந்து செல்வது பொருத்தமானது. மேலும் வேலைக்கு செல்பவர்கள் உங்களிடம் மோட்டார் சைக்கில் இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதாக இருந்தால் சனநெரிசல் குறைந்த நேரத்தில் பயன்படுத்துங்கள்.
அதே போன்று உங்களில் ஒருவருக்கு சளி, தொண்டை வலி, அல்லது காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு அறிவித்து பரிசோதனையொன்றை மேற்கொள்ளுங்கள். இதன் ஊடாக தொற்று இருப்பின் சிகிச்சையினை பெற்றுக்கொள்ளலாம். அதே போன்று உங்களில் இருந்து மற்றுமொருவருக்கு நோய் தொற்றுவதை தவிர்த்துக்கொள்ளலாம்.’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles