பூறு மூனா எனப்படும் ரவிந்து சங்கவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆயுதக் கடத்தல் தொடர்பான தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
