பசறை – மொனராகலை பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த வீதியில் தொழும்புவத்தை 3 ஆம் கட்டை பகுதியில் தந்தையும், மகனும் மோட்டார் சைக்களில் பயணித்த வேளை சிறிய பட்டா ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய தந்தை பலத்த காயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இறந்த நபரின் சடலம் பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தகராஜ்
