நீராடச் சென்ற நால்வர் மாயம்

வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் இன்று (21) காலை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles