” ஜனாதிபதியின் திட்டங்களை கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கமாட்டோம்” -மொட்டு கட்சி

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில் எமது கட்சி இல்லை. உரிய ஆய்வுகளின் பின்னரே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும், அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குமாறும் ஜனாதிபதியிடம் முதல் கோரிக்கை முன்வைத்தோம். அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்ததாக பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு. அதுவும் தற்போது எட்டப்பட்டுவருகின்றது.

எனவே, இவ்விரு விடயங்களுக்கு அப்பால் சென்று ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளை கண்களை மூடிக்கொண்டு நாம் ஆதரிப்பதில்லை. ஆழமாக ஆராய்ந்த பின்னர் நாட்டுக்கு சாதகமான விடயங்களுக்கே ஆதரவு வழங்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles