புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (4) நள்ளிரவு முதல் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி,
- முச்சக்கர வண்டிகளுக்கு 5லீட்டரில் இருந்து 8லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிள்களுக்கு 4லீட்டரில் இருந்து 7லீட்டராக
- பேருந்துகளுக்கு 40லீட்டரில் இருந்து 60லீட்டராக
- கார்களுக்கு 20லீட்டரில் இருந்து 30லீட்டராக
- லொரிகளுக்கு 50லீட்டரில் இருந்து 75லீட்டராக
- சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20லீட்டரில் இருந்து 30லீட்டராக
- வேன்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30லீட்டராக
- land vehicles 15 லீட்டரில் இருந்து 25 லீட்டராக
- quadric cycle 4 லீட்டரில் இருந்து 6லீட்டராக எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.










