ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) அமெரிக்கக் கடற்படையால் வளைகுடாப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடல்வழித் தடையை மீற முயன்ற இந்தக் கப்பலின் இயந்திரப் அறையைச் சேதப்படுத்தி அமெரிக்கப் படைகள் அதைக் கைப்பற்றியுள்ளன.
இந்தச் செயலை ஆயுதம் ஏந்திய கொள்ளைச் சம்பவம் என்று ஈரான் விமர்சித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காகத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் செல்லவிருந்த நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதிபேச்சு நடைபெறவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
