“வழிபாட்டுச் சின்னங்களை அத்துமீறி வைக்க முடியாது”

“வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு. அதை எந்தத் தரப்பும் கேள்விக்குட்படுத்த முடியாது. அத்துடன் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வடக்கில் மத ரீதியில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இந்தப் பிரச்சினைகளை வைத்து அல்லது பிரச்சினைகளை மேலும் தூண்டிவிட்டு எவரும் அரசியல் இலாபம் தேட முயலக்கூடாது.

நீதிமன்ற வழக்கில் ஒரு பிரச்சினை இருந்தால் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய அரசு நடவடிக்கை எடுக்கும். எனினும், வடக்கில் மத ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைகளை வளர விடாமல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரில் விரைந்து தீர்வு காண்போம்.” – என்றார்.

Related Articles

Latest Articles