சமனலவெவவை பார்ப்பதற்காக கடந்த 6 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்திருந்த காதலர்களை அச்சுறுத்தி, காதலனை மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து விலங்கிட்டு காதலியை அருகில் உள்ள பற்றைக்காட்டுக்கு இழுத்துச் சென்று நிர்வாணப்படுத்தி – வல்லுறவுக்குட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த காதலி தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சமனலவெவயை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபரொருவர் தான் பொலிஸ் அதிகாரி என தெரிவித்து, அடையாள அட்டையை காண்பித்து போதைவஸ்து இருக்கின்றதா என இருவரையும் சோதனையிடவேண்டுமென தெரிவித்து, காதலனை அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து விலங்கிட்டுள்ளார்.
18 வயதான யுவதியை அருகிலுள்ள பற்றைக்காட்டுக்கு இழுத்துச் சென்று நிர்வாணப்படுத்தி வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். நிர்வாண கோலத்திலிருந்த அவரை கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுக்க முயற்சித்துள்ளார். எனினும், அப்பெண் அதனை தடுத்துள்ளார்.
இனம்தெரியாத நபரொருவர் பொலிஸ் அதிகாரியைப்போல் சமனலவெவ பிரதேசத்தில் நடமாடுவதாக அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்று சமனலவெவ பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
உடனடியாக செயற்பட்ட பொலிசார் விரைந்து வந்து நிர்வாணமாக இருந்த யுவதியையும் விலங்கிட்டிருந்த இளைஞனையும் காப்பாற்றியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி யையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர் ஹம்பேகமுவ போலிஸ் நிலையத்தில் கடமையானற்றும் கான்ஸ்டபிள் என்று பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. யுவதியை பொலிசார் வைத்திய பரிசோதனைகளுக்காக பலாங்கொட வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
