டிபெண்டர் வாகனம் மோதி பசறையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

மஹியங்கனைப் பகுதியில் டிபெண்டர் ரக வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று மாலை சுமார் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பசறை, பக்கீர் சாபு மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இச்சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிபெண்டர் வாகனத்தின் சாரதி மஹியங்கனைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த டிபெண்டர் வாகனம் மோதியதில், வீதியில் பயணித்த மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கார் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளன.

இவ்விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மஹியங்கனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

த.டிமேஷன்

Related Articles

Latest Articles