கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் வயோதிபர்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்களை மருந்துகள் மூலம் மயக்கி அவர்களிடமுள்ள பணம் மற்றும் ஆபரணங்களை திருடிய இருவரை கைது செய்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் அவ்வாறு திருடிய ரூ.12 இலட்சம் பெறுமதியுள்ள நகைகளை வெலிகம பகுதியிலுள்ள நகைக்கடை ஒன்றில் விற்றுள்ளதும் அந்த நகைகளை குறித்த கடைக்காரர்கள் உருக்கியுள்ளதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சிகிச்சைக்கு வரும் வயது முதிர்ந்த பெண்களிடம் தாமும் சிகிச்சை பெற வந்தவர்கள் போல் நட்பாக பேசி உணவு வாங்கிக் கொடுப்பதாகப் பேசி உணவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளனர். பின் அவர்கள் மயங்கியவுடன் அவர்களிடமிருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளது. விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
