ஆற்றங்கரையில் நின்றவரின் தங்க சங்கிலி அபகரிப்பு

மஹியங்கனை, மகாவலி ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை கொள்ளையடித்த நபரை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18ஆம் திகதி மாபகதேவாவ சேனானிகம பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவர் நகரில் உள்ள சாரதி பயிற்சி பாடசாலைக்கு சென்றுவிட்டு சில தேவைகளுக்காக மகாவலி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இந்த நபரை பயமுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் ஒன்றரை பவுன் சங்கிலியை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் மஹியங்கனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் விஜேரத்ன உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles