‘மலையகம் – 200’ – விசேட முத்திரை வெளியிட ஏற்பாடு!

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு வழங்கிய பங்களிப்பை கௌரவித்து, அவர்களை பாராட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதற்காக ‘மலையகம் – 200’ எனும் தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதன் ஓர் அங்கமாக விசேட முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அந்த முத்திரை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், அதில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் எவை என்பன குறித்து மக்களிடமிருந்தும் கருத்துகள் மற்றும் யோசனைகள் கோரப்பட்டுள்ளன.

மலையக கலை, கலாச்சார பண்பாட்டு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

எனவே, உங்களிடமும் ஏதேனும் யோசனை அல்லது மாதிரியை (முத்திரை எவ்வாறு இருக்க வேண்டும் என வரைதல்) தயாரிக்ககூடியதாக இருந்தால் அவற்றை உரிய வகையில் மே மாதம் 10ம் திகதிக்குள் கீழ்வரும் முகவரிக்கு ‘பதிவு’ தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி –

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு

இலக்கம் 45,

புனித மைக்கல் வீதி ,

கொழும்பு – 03.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles