கட்சி முடிவை எட்டி உதைத்துவிட்டு அரசுக்கு ‘கைகொடுத்தார்’ பௌசி! சஜித் அணி சீற்றம்!!

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்த தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என தெரியவருகின்றது.

மேற்படி யோசனைமீதான வாக்கெடுப்பை புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.

எனினும், இது விடயத்தில் கட்சி முடிவைமீறி வாக்கெடுப்பில் பங்கேற்று யோசனைக்கு ஆதரவாக பௌசி வாக்களித்தார்.

இந்நிலையிலேயே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles