பௌசி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று எடுத்துள்ள அதிரடி முடிவு

” நாடாளுமன்ற உறுப்பினர் பௌசியின் தீர்மானம் தவறானது. கட்சி முடிவுக்கு எதிரானது. எனவே, அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று அறிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனைமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது வாக்கெடுப்பில் பங்கேற்காதிருக்கும் முடிவை ஐக்கிய மக்கள் சக்தி எடுத்திருந்தது. எனினும், வாக்கெடுப்பில் பங்கேற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி, யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரஞ்சித் மத்தும பண்டார,

” ஐக்கிய மக்கள் சக்திக்கு விழுந்த வாக்குகளாலேயே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். கட்சி முடிவுக்கு எதிராக வாக்களித்துள்ளார் .இது பற்றி அவரிடம் விளக்கம் கோரப்படும். அவரின் முடிவு தவறானது. எனவே, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles