பொகவந்தலாவ, பொகவானை தோட்டத்தின் 11ஆம் இலக்க தேயிலை மலையிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
தேயிலை மலைக்கு தொழிலுக்காக சென்ற,
பொகவானை தோட்டத்தைச் சேர்ந்த 78 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லன் ராமசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் கிளங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்