பாதாள உலகக் குழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘இரத்மலானே குடு அஞ்சு’ என அழைக்கப்படும் சிங்கராகே சமிந்த சில்வா பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சர்வதேசப் பொலிஸாரால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்ச டி சில்வாவின் தந்தையின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக இவர் பெயரிடப்பட்டுள்ளார்.
இவரை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.