சாட்சி கூண்டில் ஏறிய சந்தேகநபர் தற்கொலை முயற்சி – திருமலை நீதிமன்றில் பரபரப்பு

நீதிமன்றில் சாட்சி கூண்டில் ஏறிய சந்தேக நபரொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பமொன்று இன்று (04) திருகோணமலை நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவர், திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சாட்சி கூண்டில் முற்படுத்தப்பட்டபோது நீதவானுக்கு முன்னால் தன்வசம் வைத்திருந்த பிக்ரேசரினால் கழுத்தை அறுப்பதற்கு முற்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல் துறையைச்சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத ஹரோயின் போதைப் பொளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை (04) திருகோணமலை நீதவான் நீதிமன்று 2 ல் முற்படுத்தப்பட்டபோது சாட்சி  கூண்டில் நின்ற நிலையிலையே தனது கைவசம் மறைத்து வைத்திருந்த பிக்ரேசரை பாவித்து கழுத்தை அறுத்து தற்கொலை முற்பட்டுள்ளார் எனவும் தெய்வாதினமாக உயிர் தப்பிய நிலையில் கழுத்தில் இரு காயங்களுடன் திருகோணமலை பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த 2021 ஜூன் மாதம் தனது மனைவியாரின் தந்தையையும் தன் குழந்தையையும் படு கொலை செய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எனவும் இவரின் குழந்தை மரணித்துப்போன நிலையில் இவர் வழக்கிலிருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எனவும் தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற் கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles