” மொட்டு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்”? – வெளியானது அறிவிப்பு!

” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வேட்பாளரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கும். அந்த வேட்பாளர் பஸில் ராஜபக்சவாககூட இருக்கலாம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமும், நான்கு மாதங்களும் உள்ளன. எனவே, உரிய நேரத்தில் வெற்றி வேட்பாளரை எமது கட்சி பெயரிட்டு – அறிவிக்கும். அந்த வேட்பாளர் பஸில் ராஜபக்சவாககூட இருக்கலாம்.

நாட்டின் தேவைகருத்தியே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எமது கட்சி முடிவெடுக்கும்.” எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles