கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணம்

கால்வாயில் இருந்து மக்கள் கட்டு கட்டாக பணத்தை அள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா – பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை ஒன்று கிடந்தது. அதோடு சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன.

இதை பார்த்த சிலர் கால்வாய்க்குள் இறங்கி அந்த மூட்டையை பிரித்த போது கட்டு கட்டாக பணம் இருந்தது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதை அடுத்து கிராம மக்கள் பணத்தை எடுக்க முண்டியடித்தனர்.

கழிவு நீரில் மிதந்த 2000, 500, 100 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றனர். இந்நிலையில் அதிகாலையில் வாகனத்தில் வந்த சிலர் பண மூட்டையை கால்வாயில் வீசி சென்றதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Articles

Latest Articles