சிட்னியில் இம்மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருந்த ‘குவாட்’ தலைவர்களின் உச்சி மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் Anthony Albanese இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது ஆஸ்திரேலிய பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி இரத்து செய்ததையடுத்தே மாநாடு பிற்போடப்பட்டுள்ளது.
பாதீடு தொடர்பில் தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டே அமெரிக்க ஜனாதிபதி தனது பயணத்தை இரத்து செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ‘குவாட்’டில் அங்கம் வகிக்கின்றன.
அதேவேளை, பிரதமர் மோடி ஆஸ்திரேலிய வரக்கூடும் என ஆஸி. பிரதமர் நம்பிக்கை வெளியிட்டாலும், அவரின் வருகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.










