கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று (19) சுப நேரத்தில் தன்னுடைய கடமைகளை ஆரம்பித்தார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.










