‘ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை’

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் எவருக்கும் கோவிட் 19 தொற்று ஏற்படவில்லை என்பது ஊர்ஜிதமாகியிருப்பதாக, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேக்கர தெரிவித்தார்.

பல்கலைக்கழக உபவேந்தரிடம், கோவிட் 19 தொற்று குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்துஅவர் கூறுகையில், “ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் எந்த வொருமாணவருக்கும், கல்வியாளர்களுக்கும்,ஊழியர்களுக்கும் கோவிட் 19 தொற்று இல்லையென்பதும், ஊர்ஜிதமாகியுள்ளது.

கோவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கும் மினுவாங்கொடை மற்றும் அயல் பிரதேசங்களிலிருந்து 38 மாணவர்கள் இப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவந்தன.

அப்பரிசோதனைகளில் எவருக்கும் கோவிட் 19 தொற்று இல்லையென்றும் ஊர்ஜிதமாகியுள்ளது.

ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் கோவிட் 19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதானபலரின் பிரசாரங்களில் எவ்வித உண்மையுமில்லை. உண்மைக்குப் புறம்பாக இவ்வகையில் பிரசாரங்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களாவர். இதுவிடயத்தில் எவரும் அச்சப்படவேண்டிய அவசியமில்லை. கோவிட் 19 நோய்த் தொற்றுசுகாதார வழிமுறைகள் முறையாகவும்,கிரமமாகவும் பின்பற்றப்பட்டுவருகின்றன” என்றும் கூறினார்.

எம்.செல்வராஜா ,பதுளை

Related Articles

Latest Articles