புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
அத்துடன், மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தலைமையிலும் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பான புதிய சட்டமூலம் தொடர்பில் ஆராய சரித ஹேரத் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது..
