கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை பகுதியில் சிறு அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 2.0 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் திங்கட்கிழமை (5) இரவு பதிவாகியுள்ளது.
