‘என் தங்கமே ரொம்ப கவனம், அம்மா இனி வரமாட்டேன்’ -மகனுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம் தாய் தற்கொலை – புபுரஸ்ஸ பகுதியில் சோகம்

கம்பளை, புபுரஸ்ஸ டெல்டா தோட்ட வடக்கு பிரிவில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாயொருவரின் சடலம் கடந்த 7 ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஸ்வர்ணா என்ற 22 வயது பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குழந்தை ஒன்றின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததையடுத்து பிரதேச வாசிகள் சென்றுபார்த்த பொழுது தூக்கில் தொங்கிய தாயின் கால்களைபிடித்து கொண்டு ஒன்றரை வயது குழந்தை அழுவதைனை கண்டுள்ளனர்.

பின்னர் குறித்த பெண்ணை மீட்டு தோட்ட வைத்திய சாலையின் வைத்தியரிடம் காண்பித்தபொழுது அப்பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்ட புபுரஸ்ஸ பொலிஸார் குறித்த பெண்ணால் தனது ஒன்றரை வயது மகனுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை மீட்டுள்ளனர் அதில் ‘என் தங்கமே நீ ரொம்ப கவனம் அம்மா இனி வரமாட்டேன்’ என்று எழுதப்பட்டிருந்துள்ளது .

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புபுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்                                                                                                                                                                                                                                கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles